கொள்கைகள் - நேர்மையாளர் சகாயம் அரசியல் பேரவை

 

 1. சாதி, மத வெறுப்பரசியலை நிராகரித்து மக்களிடையே சமத்துவத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் உருவாக்குதல்.

 2. தாய்மொழியைப் பாதுகாத்தல்; இந்தி உள்ளிட்ட பிற மொழித் திணிப்பை எதிர்த்தல்; தமிழால் இணைத்து தமிழக மக்களிடையே தேசிய ஓர்மையை, ஒற்றுமையை வலுப்படுத்துதல்; அரணாக நின்று உலகத்தமிழர்களைப் பாதுகாத்தல்.

 3. பல்வேறு தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேசம் என்ற 'ஒற்றை ஆதிக்க முன்னெடுப்பை எதிர்த்தல்.

 4. தமிழ்நாட்டின் மாநில உரிமைகளைப் பாதுகாத்தல்; இழந்த அதிகாரங்களைத் திரும்பப் பெறுதல்;

 5. இலஞ்சம், ஊழல், முறைகேடுகளற்ற, நேர்மையான, வெளிப்படையான ஆட்சி நிருவாகத்தை ஏற்படுத்துதல்.

 6. இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாத்து சமூகநீதியை நிலைநாட்டல்.

 7. தமிழக அரசுப் பணிகள் முழுதும் தமிழக மக்களுக்கே உறுதிசெய்தல்; மாநிலத்திற்குட்பட்ட இந்திய (ஒன்றிய) அரசுப் பணிகளில் தமிழ்நாட்டவருக்கு முன்னுரிமை வழங்குதல்.

 8. தரமான, கட்டணமில்லா , தமிழ்வழிப் பள்ளிக்கல்வியை நடைமுறைப்படுத்துதல்; உயர்கல்வியிலும் தமிழ்வழி பயிற்றுதலை ஊக்குவித்தல்.

 9. அனைவருக்கும் தரமான, இலவச மருத்துவச் சேவையை உறுதி செய்தல்.

 10. வேளாண்மை , நெசவு, மீன்பிடித்தல் போன்ற நலிவடைந்த தொழில்களை மேம்படுத்துதல்.

 11. படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பெரும் எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்

 12. நீட் (NEET), புதிய கல்விக் கொள்கை, குடியுரிமை திருத்தச் சட்டம், புதிய வேளாண் சட்டம் முதலான மக்கள் விரோதச் சட்டங்களை நிராகரித்தல்.

 13. ஸ்டெர்லைட் போன்ற நச்சு தொழிற்சாலைகள், கூடங்குளம் அணு உலை, டெல்டா பகுதிகளில் மீத்தேன், நியூட்ரினோ மற்றும் எட்டுவழிச்சாலை உள்ளிட்ட சுற்றுச்சூழலைப் பாதிக்கும் நாசகாரத் திட்டங்களை எதிர்த்தல்.

 14. கனிமவளச் சுரண்டல், ஆற்று மணல் கொள்ளைகளைத் தடுத்தல்; நீர் ஆதாரங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாத்தல்.

 15. தமிழீழம் மற்றும் உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களிடம் ஐ.நா அவையின் மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தி, அவர்தம் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கப் பாடுபடுதல்.

 16. சமூகத்தில் இருக்கும் பிற்போக்குத்தனங்களைக் களைந்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான உரிமை, பாதுகாப்பு, முன்னேற்றத்தை உறுதி செய்தல்.

 17. தமிழ்நாட்டில் பரவலாக மதுவில் மூழ்கியுள்ள இளைஞர்களை மீட்டெடுத்து நல்வழிப்படுத்துதல்.

 18. பெரிய நிறுவனங்கள் வழியான வளர்ச்சிக்குப் பதிலாக சிறு, குறு, அமைப்புசாரா மற்றும் கிராமப்புற முதலீடுகளை ஊக்குவித்து மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்.